தாய் சேய் இறப்புக்கான காரணங்கள் நடுநிலையாக ஆராயப்பட்டு மக்களுக்கு
தெரியப்படுத்தப்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் ஏற்பட்ட அவசர நிலை குறித்து மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், துணை மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள், நோயாளர் காவு வண்டி சாரதிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோர் இணைந்து நேற்றையதினம் (22) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
இவ்வாறான கவலைக்கிடமான சம்பவங்களின் விளைவுகளாக வைத்தியசாலையின் ஒட்டுமொத்த
ஊழியர்களுமே மனமுடைந்து செயலற்று போயிருக்கிறோம்.
வினைதிறனான சேவை
நீங்கள் அறிந்தது போல வைத்திய சேவையை தரும் சேவையாளர்கள் சமப்பட்ட மனநிலை
இருக்க வேண்டும் என்பது நியதி.
அவ்வாறு இல்லாவிட்டால் சேவை தளத்தில் உறுதியிராது. தற்சமயம் மேற்கண்ட
சம்பவங்களால் ஒரு வினைதிறனான சேவை அல்லது மேலும் தரத்தை மேம்படுத்த முடியாத
மனச்சுமையான நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எல்லாவற்றிக்கும் மேலாக தென்பகுதியில் இருந்து கடமைக்கு வரும் வைத்தியர்கள்,
தாதியர்கள் தங்களது பாதுகாப்பின்மையை உணர்கின்றார்கள்.
இறப்புக்கான காரணங்கள்
இந்த நிலமை பொருத்தமற்ற
விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்த நிலை மாறி இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை விடுத்து எங்களை
நாங்களே ஆசுவாசப்படுத்தி சேவையை தொடர மன்னார் மாவட்ட மக்களாகிய உங்கள்
பங்களிப்பை எதிர்பார்த்தபடி நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
தாய் சேய் இறப்புக்கான காரணங்கள் நடுநிலையாக ஆராயப்பட்டு மக்களுக்கு
தெரியப்படுத்தப்படும்.
அதற்குரிய முழு ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கி
கொண்டிருக்கிறோம் – என குறிப்பிடப்பட்டுள்ளது.