முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

மன்னார்(Mannar) பொது வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு ஒன்று மன்னார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளது.

குறித்த விசேட குழு இன்றைய தினம் (20.11.2024) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்துள்ளார்.

மரணம் தொடர்பான விசாரணை

மன்னார், பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ சிறி திருமணமாகி 10 வருடங்கள் பிள்ளை இல்லாத நிலையில், நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது தாயும்
சேயும் மரணமடைந்துள்ளனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம்: விசாரணைகள் ஆரம்பம் | Mannar Hospital Delivery Case Mother And Baby Died

இந்த நிலையில் உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றினைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நீதவான் இறந்த தாய் மற்றும் சேயின் சடலங்களை பிரதே பரிசோதனைக்காகவும்
மேலதிக விசாரணைகளுக்காக வும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கள விஜயம்

இதையடுத்து, மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்றைய தினம்(20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம்: விசாரணைகள் ஆரம்பம் | Mannar Hospital Delivery Case Mother And Baby Died

மேலும், மாவட்ட ரீதியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு வடமாகாண சுகாதார அமைச்சிடமும் விசாரணைகளை முன்னெடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணையின் முடிவில் தவறிழைத்தமை கண்டுபிடிக்கப்பட்டால் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.