முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்

மன்னார் (Mannar) மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட
கலந்துரையாடல் ஒன்று இன்று (09) மடு திருத்தலத்தில்
இடம்பெற்றுள்ளது.

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 6ஆம் திகதி
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவுக்கான ஆயத்த
கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார்
மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் பங்குபற்றுதலுடன் இன்று (09) காலை மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்னாயத்த நடவடிக்கைகள் 

வருடா வருடம் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல
பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள்
வந்து செல்வது வழமை.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல் | Mannar Madu Temple Thiruvizha Meeting

இதற்கமைய, வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு
முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் தொடர்பில் அழைக்கப்பட்ட
திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு
சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், நீர் மற்றும் உணவு விநியோகம்
உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது.

சட்டம் ஒழுங்கு  

அதேவேளை, சட்டம் ஒழுங்கை பின்பற்றும் வகையில் முப்படையினரின் பாதுகாப்பு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல் | Mannar Madu Temple Thiruvizha Meeting

எதிர்வரும் 06ஆம் திகதி மருத மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,15 ஆம் திகதி திருவிழா
திருப்பலி கூட்டுத்திருபலியாக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த
கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குரு
முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர்
அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார், இராணுவம், பொலிஸார், கடற்படை
அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள
தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.