மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், அண்மையில் மாவட்டத்தில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம்
பரவலாக எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கடிதமானது குடும்ப நல சுகாதார அலுவலரான இன்பராசா விஜயலட்சுமி
என்பவருக்கு எதிராக எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள்
போராளியான அவரது கணவரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் போராளி
மேலும், அக்கடிதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ளமை விமர்சனத்தை
ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிராக அவருடைய
பணியாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
பலரை பழிவாங்கும் நோக்குடன் அவர்களுக்கு இடமாற்றம் வழங்குதல், மாதாந்த
சம்பளத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளில் அவர்
ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
பல்வேறு முறைப்பாடுகள்..
அவரால் சுமார் 10இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரித்து தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக
கருத்துக்களை பரிமாறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளிநாடு சென்றுள்ளமையினால் அவர்
நாட்டிற்கு திரும்பியவுடன் அவருக்கு எதிரான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.