முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாமல் தான் எதிர்கட்சி தலைவர்: சஜித்தை எச்சரித்த மனோ கணேஷன்!

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நுகேகொடையில் கூடியது போன்று ஒரு கூட்டத்தை கூட்டி காட்டும் வரை, நாட்டிலே நாமல் ராஜபக்ச தான் எதிர்கட்சி தலைவர் என தமிழ் முற்போக்கு அணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (21.11.2025) நாமல் ராஜபக்ச தலைமையில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளால் நுகேகோடையில் பொதுப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் சுமார் 5000 பேர் வரையில் கலந்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொதுப் பேரணி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாமல் கட்சி

மேலும், குறித்த பதிவில், “நிகழ்வு ஆரம்பிக்க முன்-பிடித்த, பின்-பிடித்த, படங்களை, போட்டு, ஊடக நிறுவனங்களின் விருப்பபடி, கூட்டம் பற்றி, செய்திகள் போடலாம்.

அவரவர் விருப்பம் வேறு. உண்மை வேறு. இதை நாம் பகுத்து அறிய வேண்டும்.

சில மாதங்களுக்கு முன் சொந்த ஊரிலேயே, 50 பேரை கூட திரட்ட முடியா நிலையில் இருந்த நாமல் கட்சி, இன்று UNP, SLFP உடன் சேர்ந்து தம் பலத்தை காட்டியுள்ளது.

கூட்ட ஏற்பாட்டாளர் பலமுறை நமது கட்சிக்கு அழைப்பு விடுத்தார்கள். நமக்கு “சரி வராது Bro” என மறுத்து விட்டோம்.

இந்தக் கூட்டத்தை வைத்து யாரும், அரசாங்கத்தை உடனடியா கவிழ்க்க முடியாது. அது கலர் கனவு. மேடையிலும், அப்படி சொல்லப்படவில்லை.

இது, அரசாங்கத்துக்கு சவால் விடும் கூட்டம் என்பதை விட, தேசத்தின் பிரதான எதிர்க்கட்சி யார் என நிலை நாட்டுவதே அங்கே முதல் கனவு.

இதன்மூலம், இங்கே கூடிய சிங்கள (பெளத்த) மக்கள், சில செய்திகளை தந்தது.

2019 ஆம் ஆண்டில் கோட்டாவுக்கும், பின் 2024 ஆம் ஆண்டில் அநுரவுக்கும் வாக்களித்த, அதே 69 இலட்சம், விரும்பினால் தாய் வீடு திரும்பலாம். எந்நேரமும் மாறலாம். மாறாமலும் விடலாம். எப்படியும், இங்கே நாம் தான் எஜமானர். எங்கள் “தேசாபிமானம்” தான் இங்கே “பிரைம் சப்ஜெக்ட்”.

சிறுபான்மை சில்லறைகள் மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும் அல்லது ஓரமாக போய் விளையாட வேண்டும்.

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டி காட்டும் வரை, நாட்டிலே நாமல் தான் “ஒபொசிசன் லீடர்”” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.