முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயத்தில் மருதங்கேணி- புதுக்காடு பிரதான வீதி!

வடமராட்சி, கிழக்கு மற்றும் பச்சிளைப்பள்ளி மக்களின் பிரதான போக்குவரத்து
பாதையாக காணப்படும் மருதங்கேணி-புதுக்காட்டு பிரதான வீதி பாரியளவு விபத்துக்கள்
ஏற்படும் அபாயத்தில் உள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கடந்த காலங்களில் கள்ள மண் அதாவது சட்ட விரோத மண் அகழ்வு அதிகரித்து
காணப்படுகிறது.

இந்தநிலையில், சட்ட விரோதமாக அகழப்படும் மண்ணினை கடத்தல் கும்பல்கள்
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு விற்பனை செய்வதற்கு இந்த
பிரதான பாதையினையே பயன்படுத்தி வருகின்றனர்.

மண் கடத்தல்

இதனால் கடந்த சில நாட்களாக வீதியோரங்களில் அதிகளவாக மண் பரவி இருப்பதை காணக்கூடியதாக
இருந்தது.ஆனாலும் நேற்றையதினம்(10) அதிகளவாக பெய்த கன மழையின் போது கள்ள மண் கும்பல்கள்
தமது ஆதிக்கத்தை அதிகளவு மேற்கொண்டு உள்ளனர்.

பாரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயத்தில் மருதங்கேணி- புதுக்காடு பிரதான வீதி! | Maruthankeni Pudukkadu Main Road Risk Of Accidents

இதனை அவதானித்த பிரதேச மக்கள் இது
சம்பந்தமாக விசேட அதிரடிப்படையினருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர் மருதங்கேணி புதுக்காட்டு பகுதியை பொலிசார் மற்றும் விசேட
அதிரடிப்படையினர் முற்றுகை இடுவதை அறிந்த கள்ள மண் மாஃபியாக்கள் தாம் ஏற்றி சென்ற
அனுமதி அற்ற மண்ணை வீதியோரங்களில் பறித்து விட்டு சென்றுள்ளனர்.

விபத்துக்கள்

இதனால் இன்று(11) காலை சுமார் 3 கனரக வாகனங்களுக்கு அதிகமான மண்கள் வீதியோரங்களில் பரவி
காணப்படுவதால் பாரியளவு விபத்துக்கள் ஏற்படும் அபாயத்தில் உள்ளதாகவும் இன்றைய தினம் காலை ஒரு சில சிறு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது எனவும் மக்கள்
தெரிவிக்கின்றனர்.

பாரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயத்தில் மருதங்கேணி- புதுக்காடு பிரதான வீதி! | Maruthankeni Pudukkadu Main Road Risk Of Accidents

தற்போது வீதி யோரங்களில் காணப்படும் மண்ணை கிளிநொச்சி வீதி அதிகார சபை
அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்