முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் இளைய ஊழியர்கள் இன்று (2510.2025) காலை 11 மணி முதல் 11.30 வரை பணியிலிருந்து விலகி, கருப்புப் பட்டி அணிந்து வைத்தியசாலை முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, இந்த போராட்டம், (23.10.2025) இரவு குடிபோதையில் இருந்த ஒருவர் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்து ஒரு இளைய ஊழியரைத் தாக்க முயன்ற சம்பவத்தையடுத்து முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நபர் சம்பவத்திற்குப் பிறகு வைத்தியசாலயை விட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு உறுதி 

போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியசாலை ஊழியர்கள் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! | Maskeliya Divisional Hospital Doctors Protest

 “சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்,” என வலியுறுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா காவல்துயைில் முறைபாடு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைது 

சம்பவத்தில் தொடர்புடைய நபர் மஸ்கெலியா டி-சைட் தோட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் நேற்று இரவு (24.10.2025) கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! | Maskeliya Divisional Hospital Doctors Protest

அண்மையில் டயகம பிரதேச வைத்தியசாலையிலும் இதேபோன்ற தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

அந்த சம்பவத்தையடுத்து அங்கிருந்த வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் பல நாட்கள் சேவையில் இருந்து விலகியிருந்த நிலையில், நேற்று (24.10.2025) அங்குள்ள அன்றாட சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்