முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாவகச்சேரி நகரசபையில் பாரிய குழப்பம்..! உள்ளூராட்சி ஆணையாளரின் திடீர் மனமாற்றம்

யாழ். சாவகச்சேரி நகரசபையை ஒத்திவைக்க வாக்கெடுப்பு வேண்டுமா என உறுப்பினர்களிடம் கேட்டுவிட்டு வாக்கெடுப்பை உறுப்பினர்கள் கோரியபோது உள்ளூராட்சி ஆணையாளர் அதனை மறுத்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபையின் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவில் வாக்களிக்க முடியாது என உயர் நீதிமன்றம்
இடைக்காலக் கட்டளையை பிறப்பித்திருந்தது.

இதன் காரணமாக குறித்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளரிடம் தமிழ்த் தேசிய பேரவை எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

பகிரங்க வாக்கெடுப்பு

சபையை ஒத்திவைக்குமாறு தம்மிடம் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கையினை உள்ளூராட்சி ஆணையாளர் இன்று(13) சபையில் கூறி, சபையை ஒத்திவைக்க ஏனைய உறுப்பினர்களும் சம்மதமா அல்லது இதனை வாக்கெடுப்பு மூலம் முடிவெடுப்போமா என கேட்டுள்ளார்.

சாவகச்சேரி நகரசபையில் பாரிய குழப்பம்..! உள்ளூராட்சி ஆணையாளரின் திடீர் மனமாற்றம் | Massive Chaos In Chavakachcheri Municipal Council

இதனையடுத்து, தமிழ்த் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்தோர், சபையை ஒத்திவைப்பதா இல்லையா என்பதை பகிரங்க வாக்கெடுப்பை நடாத்தி முடிவெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென தனது கருத்திலிருந்து மாறிய உள்ளூராட்சி ஆணையாளர், சட்டத்தின் பிரகாரம் தவிசாளர் தெரிவை நடாத்தியே தீருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபையில் பாரிய குழப்பம்..! உள்ளூராட்சி ஆணையாளரின் திடீர் மனமாற்றம் | Massive Chaos In Chavakachcheri Municipal Council

முன்னர் சபையை ஒத்திவைக்க வாக்கெடுப்பு வேண்டுமா என உறுப்பினர்களிடம் கேட்டுவிட்டு வாக்கெடுப்பை உறுப்பினர்கள் கோரியபோது, உள்ளூராட்சி ஆணையாளர் திடீரென மறுத்தது ஏன் என தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்