வடக்கு மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக தேசிய அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றிய உறுப்பினர் ஆனந்தநடராஜா செந்தூரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மோசடிகளில் ஈடுபடுகின்ற அரசநிறுவனங்களுக்கு எதிராக தாம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையிலே ஊழலுக்கு எதிராக அவர் குரல் எழுப்ப முற்பட்டபோது ஒரு சில நபர்களால் அவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வடமாகாணத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

