அரசாங்க வைத்தியசாலைகளில் பாரிய மருந்துப் பற்றாக்குறை நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்க வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட முக்கிய மருந்துகள் 380 வரையில் பற்றாக்குறை நிலவுகின்றது.

மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு
அத்துடன் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மருத்துவ உபகரணங்களை வெளியில் கொள்வனவு செய்ய நேர்ந்துள்ளது.

அத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக அரசாங்க வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை.
அதற்குப் பதிலாக நோயாளிகள் தனியார் நிலையங்களை நாட வேண்டியேற்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

