முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு அளம்பில் பிரதான வீதியில் வெட்டப்படும் பாரிய குழி : காரணம் என்ன..!

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவு (Mullaitivu) அளம்பிலில் பிரதான வீதிக்கு குறுக்காக பாரிய குழியொன்று வெட்டப்பட்டுள்ளது.அளம்பில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியிலேயே இந்த குழி வெட்டப்பட்டுள்ளது.

வீதியின் ஒரு பகுதி வீதிப் போக்குவரத்துக்காக பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு இருக்க வீதியின் மற்றைய பகுதியில் 25 மீற்றர் நீளத்திற்கு தடையை ஏற்படுத்தி பாரிய குழியினை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் அமைத்துள்ளனர்.

புதிதாக அமையவிருக்கும் பாலத்திற்கான கட்டுமானப் பணிகளுக்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த செயற்பாட்டினை ஒருங்கிணைத்து வரும் நெறிப்படுத்துநருடன் மேற்கொண்ட உரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

வெள்ள அனர்த்தத்திற்கு தீர்வு

மாரி மழைக் காலங்களில் அளம்பில் சந்தியில் இருந்து விளையாட்டு மைதானம் வரையிலான வீதிக்கு இடது பக்கத்தில் உள்ள மக்கள் அப்பகுதியில் அதிகமாக தேங்கும் வெள்ளத்தினால் பாரியளவிலான இடர்களை அனுபவித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு அளம்பில் பிரதான வீதியில் வெட்டப்படும் பாரிய குழி : காரணம் என்ன..! | Massive Pothole Cut Main Road At Mullaitivu

அவர்களின் இடர்களை போக்கும் வகையில் அளம்பில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் புதிதாக பாலம் ஒன்றினை அமைப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பாலத்தினால் அளம்பில் சந்தியில் இருந்து விளையாட்டு மைதானம் வரையிலான திசையில் வீதிக்கு இடது பக்கத்தில் தேங்கும் அதிகளவான வெள்ள நீர் வீதிக்கு வலது பக்கமாக உள்ள தாழ்நிலங்களுக்கு மாற்றப்பட்டு விடும்.

பாலம் விரைவாக கட்டி முடிக்கப்பட்டால் இம்முறை மாரி மழையில் வெள்ளம் தேங்கிக்கொள்ளாது என அப்பகுதிவாழ் மக்களில் சிலர் குறிப்பிடுகின்றனர்.

இரு வழிகள் 

கடந்தாண்டு ஏற்பட்டிருந்த வெள்ளத்தினால் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்திருந்தது.சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அளம்பில் தெங்கு அபிவிருத்தி நாற்று உற்பத்தி நிறுவனமும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது.ஒவ்வொரு வருடமும் இப்படி நடப்பதாக அங்கு பணியாற்றும் பணியாளரும் குறிப்பிடுகின்றார்.

முல்லைத்தீவு அளம்பில் பிரதான வீதியில் வெட்டப்படும் பாரிய குழி : காரணம் என்ன..! | Massive Pothole Cut Main Road At Mullaitivu

இப்பகுதியில் தேங்கும் வெள்ள நீரை அகற்றுவதற்கு இரு வழிகள் இருக்கின்றன.
ஒன்று அளம்பில் சந்தியில் உள்ள குமுழமுனை வீதி இணையும் இடத்தில் உள்ள பாலத்தினை அகலமாக்குவதோடு அளம்பில் சந்திப்பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்னாக உள்ள கடவைப் பாலத்தினையும் அகலமாக்குவதாகும்.

மற்றையது விளையாட்டு மைதானத்தின் ஆரம்ப இடத்தில் வீதிக்கு குறுக்காக புதிய பாலம் அமைப்பது என அவ்விடங்களில் தரையமைவுகளையும் மழைக்கால அவதானிப்புக்களையும் குறிப்பிட்டு விளக்கியிருந்தார் அப்பகுதி வாழ் வயோதிபர்.

அவரது கருத்துக்கும் இப்போது வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய பாலம் அமைக்கப்படும் இடத்திற்கும் அதிக ஒத்திசைவு இருப்பதையும் அவதானிக்கலாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.