சிலாபம் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு நிகழ்ந்து வருவதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிலாபத்தை அண்டிய இரணவில பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 700 மீட்டர் வரை கடலரி்பபு காரணமாக கடல்நீர் நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளது.
கடலரிப்பு
இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் தற்போதைக்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் தொடர்ந்தும் கடலரிப்பு நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் மண் மூடைகள் கொண்டு தடுப்பணைகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.