முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மத்தள ராஜபக்ச விமான நிலைய உடன்படிக்கை குறித்து எழுந்துள்ள சர்ச்சை

Courtesy: Sivaa Mayuri

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் அது, விமான நிலையத்தின் எதிர்காலம் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும் குறித்த நிறுவனங்களுக்குமான உடன்படிக்கை ஆவணத்தின்படி,பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல், பறக்கும் பள்ளிகள், விண்வெளி பொறியியல் பள்ளிகள், விமான உதிரிபாகங்கள் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், ஹோட்டல்கள், தொழில் பூங்காக்கள் மற்றும் தளவாட சேவைகள் போன்ற முயற்சிகளை இந்திய – ரஷ்ய நிறுவனங்களின் கூட்டான ஜேவி மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் இடமாற்றம்

எனினும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவரின் கருத்துப்படி, விமான நிலையத்தின் முழுமை சேவைகளும் குறித்த நிறுவனத்திடம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தள ராஜபக்ச விமான நிலைய உடன்படிக்கை குறித்து எழுந்துள்ள சர்ச்சை | Mattala Rajapaksa Airport

எனவே புதிய நிர்வாகத்தின் கீழ் விமான நிலையம் எந்த வருமானத்தையும் ஈட்ட முடியாது என்று அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 90 வீதப் பணியாளர்கள், மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி தெரிவித்துள்ளார்.

விமானச் சேவைகள் 

எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை விமானங்கள் மற்றும் விமானச் சேவைகள் சபையின் தலைவர் அதுல கல்கெட்டிய, மறுத்துள்ளார்.

மத்தள ராஜபக்ச விமான நிலைய உடன்படிக்கை குறித்து எழுந்துள்ள சர்ச்சை | Mattala Rajapaksa Airport

விமான நிலையத்தின் செயல்பாடுகள் மட்டுமே குறித்த ஜேவி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது

விமான போக்குவரத்து அமைப்பு, பாதுகாப்பு உட்பட்ட சேவைகள் தொடர்ந்தும் இலங்கை அரசின் வசமே இருக்கும் என்று கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.