முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இருளில் முழ்கும் மாவடிப்பள்ளி பிரதான வீதி: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறை (Ampara) – மாவடிப்பள்ளி பிரதான வீதியில்
அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராமை காரணமாக மக்கள் பல்வேறு
அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.

தற்போது மழையுடனான காலநிலை நிலவி வருவதன் காரணமாக,  வீதியில்
செல்லும் வாகனங்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமங்களை
எதிர்கொண்டுள்ளனர்.

இது தவிர இந்தப் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதனால் மாவடிப்பள்ளி பெரிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரையிலுள்ள பிரயாணிகள் அவலங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் சிரமம்

ஆனால் பெரிய பாலம் தொடக்கம் மாவடிப்பள்ளி சியாரம் வரையில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் இரண்டு மணித்தியாலங்கள் தொடர்ந்து ஒளிர்ந்த பின் மீண்டும் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒளிராமல் பல சிரமங்களை ஏற்படுகிறது.

இருளில் முழ்கும் மாவடிப்பள்ளி பிரதான வீதி: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Mavatipalli Road Is Pitch Black And People Trouble

மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதனால் பாம்பு, முதலை, ஆமை போன்றவைகளின் அச்சுறுத்தலும் இங்கு ஏற்படுகின்றது.

கோரிக்கை

எனவே இந்த வீதியின் மின்விளக்குகள் தொடர்ந்தும் ஒளிர்வதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இருளில் முழ்கும் மாவடிப்பள்ளி பிரதான வீதி: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Mavatipalli Road Is Pitch Black And People Trouble

மேலும் குறித்த அம்பாறை – காரைதீவு-மாவடிப்பள்ளி பிரதான
வீதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 6 மாணவர்கள் உட்பட எட்டு பேர்
நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்