முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவிலாறு பகுதியில் அதிகரித்த அனர்த்தம்.. நூற்றுக் கணக்கானோர் மீட்பு

புதிய இணைப்பு

இலங்கை விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் மூலம் மாவிலாறு வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இன்று மதியம் 2 மணி வரை 154 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

செய்தி – ராகேஸ் 

(01:31PM)

மாவிலாறு பகுதியில் சிக்கியிருந்த 121 பேரை விமானப்படை மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

(01:08PM)

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால்
பாதிக்ப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட
55 பேரை இதுவரை விமானம் மூலம் மீட்டுள்ளதாக
திருகோணமலை மாவட்ட அனர்த்த இடை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்களை சீனாபே விமான
படைதளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

அதேவேளை மேலும் 22 பேர் விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றதுடன் கடல்வழி மற்றும்
விமானம் மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி – சரவணன்  

முதலாம் இணைப்பு   

மாவிலாறு பகுதியில் பேரிடர் மீட்புப் பணிகளை இலங்கை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மீட்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக விமானக் குழுவை அனுப்பியுள்ளது. 

இந்த நடவடிக்கையில் பெல்-412 ஹெலிகொப்டர், ஜெட் ரேஞ்சர் (206) ஹெலிகொப்டர், கேஏ 360ER கண்காணிப்பு விமானம் மற்றும் எம்ஐ-17 ஹெலிகொப்டர் ஆகியவை மாவிலாறுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

அவசர நடவடிக்கைள் 

குறித்த விமானங்கள், அங்கு சிக்கித் தவிக்கும் நபர்களை வெளியேற்றவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்கவும் அனுப்பப்பட்டுள்ளன.

மாவிலாறு பகுதியில் அதிகரித்த அனர்த்தம்.. நூற்றுக் கணக்கானோர் மீட்பு | Mavil Aru Region Aircraft Rescue Reconnaissance

சரியான நேரத்தில் உதவி மற்றும் தரைப்படைகளுடன் ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் வகையில் இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நிலைமை மோசமடையும் போது உயிர்களைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான வான்வழி ஆதரவைப் பேணுவதற்கும் விமானப்படை தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.