வவுனியாவில் (Vavuniya) அண்மையில் சில நாட்களாக மலேரியா நோய் தடுப்பு செயற்றிட்ட
நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் கடந்த மூன்று நாட்களாக
சாந்தசோலைப் பகுதியிலுள்ள வீடுகள், கிணறுகள், சுற்றுப்பகுதிகள் என்பன
கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்ட நடவடிக்கை
இந்தியாவின் ஐயப்ப மலைக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் சிலரிடம் காணப்பட்ட
மலேரியா நோய் தொற்றுக் காரணமாகவும் மேலும் இத்தொற்று சமூகத்தில் பரவாமல்
இருப்பதற்காகவும் இந்நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
மேலும், பொதுமக்கள் தமது
இருப்பிடங்களைத் சுத்தம் செய்து வைத்திருக்குமாறும் தமது பகுதியில் டெங்கு
நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டால் அவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படவுள்ளதாகவும் இந்தடவடிக்வடிக்கைக்கு பொதுமக்கள் தமது பூரண
ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.