முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

களுதாவளை பிரதேச சபையில் கருத்து சுதந்திரமும்,ஊடக சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

மட்டக்களப்பு- மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை
அமர்வுகளில் கருத்து சுதந்திரமும்,ஊடக சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நேற்றையதினம்(15) இடம்பெற்றது.

இதன்போது உறுப்பினர்களாகிய எமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடம்
வழங்கப்படவில்லை. இதனால் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதுடன் தவிசாளர் என்னை
தாக்கவும் முற்பட்டிருந்தார்.

தொலைபேசி பாவனை தடை

இதன் காரணமாக நாங்கள் ஒன்பது உறுப்பினர்கள்
சபையைவிட்டு வெளியேறியிருந்தோம்.

நாம் வெளியேறியதன் பின்னர் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத பல தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளன.

களுதாவளை பிரதேச சபையில் கருத்து சுதந்திரமும்,ஊடக சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு | Media Denial At Kazhuthavalai Pradeshiya Sabha

இனிவரும் காலங்களில் சபை அமர்வுகளின் போது தவிசாளர், உபதவிசாளர் ஆகியோரைத்
தவிர ஏனைய உறுப்பினர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என
தவிசாளர் அவர்கள் சபையில் முன்வைத்த போது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இனிவரும் காலங்களில் சபை அமர்வுகளின் போது ஊடகங்கள் உட்பிரவேசிப்பதற்கு அனுமதி
வழங்க முடியாது என தவிசாளர் அவர்கள் சபையில் முன்வைத்த போது தீர்மானமாக
நிறைவேற்றப்பட்டது.

உரிய நடவடிக்கை 

இந்தத் தீர்மானமானது எமது உரிமைகளை மீறும் செயல் என்பதுடன் ஊடக அடக்குமுறையுமாகும்.

சபையிலே இடம்பெறுகின்ற அதிகார துஸ்பிரயோகங்களும், அடக்குமுறைகளும்,
அடாவடிகளும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு எம்மை
வெளியேற்றிவிட்டு இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

களுதாவளை பிரதேச சபையில் கருத்து சுதந்திரமும்,ஊடக சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு | Media Denial At Kazhuthavalai Pradeshiya Sabha

அதிகார துஸ்பிரயோகங்களும், ஊழல்களும் இடம்பெற்றுவரும் நிலையில் சபையில்
இடம்பெறும் விடயங்கள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக இவ்வாறான
தீர்மானங்களை எடுப்பது ஜனநாயக மீறலும், ஊடக அடக்குமுறையுமாகும்.

உள்ளுராட்சி மன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்காத இச்சபை தொடர்பில் உரிய
அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.