முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். போதனாவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட வைத்திய நிபுணர் : சிறீதரன் விசனம்

யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட
வைத்திய நிபுணர் மீள் அழைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Sridharan) தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மாற்றீடு ஆளணி எதுவும் இன்றி யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டமையால் சிகிச்சை பெற்றுவந்த
நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதனா வைத்தியசாலை

இவர்களுக்கான சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச் சிகிச்சைகளின் பலனை
கேள்விக்குறியாக்கும் எனவும் பல் முக சீராக்கல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். போதனாவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட வைத்திய நிபுணர் : சிறீதரன் விசனம் | Medical Expert Transferred From Jaffna Hospital

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலையில் பல் முக சீராக்கல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர்
ஒருவரே உள்ளார்.

அவருடை சிறந்த சேவையினூடாக இதுவரை காலமும் காணப்பட்ட நீணட
காத்திருப்போர் நோயாளர் பட்டியல் அவரது சேவைக் காலத்தில்
இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களின் நன்மை

நோயாளர்களின் நன்மை கருதி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையிலும்
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள நோயாளர்களை
பார்வையிட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதில் பெரும்பான்மையாக அவரது சேவையினை பெறுபவர்களாக பாடசாலை மாணவர்கள்
கணப்படுகின்றனர் அத்தோடு அவர்
எந்தவொரு தனியார் மருத்துவமனைகளிலும் சேவையாற்றுவதில்லை

இவருடைய திடீர் இடமாற்றத்தினால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும்
கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது.

யாழ். போதனாவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட வைத்திய நிபுணர் : சிறீதரன் விசனம் | Medical Expert Transferred From Jaffna Hospital

இவர்களுக்கான சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச் சிகிச்சைகளில் பலனை
கேள்விக்குறியாக்கும் எனவும்
எனவே உடனடியாக அவரை போதனா வைத்தியசாலைக்கு விடுவித்து உதவ வேண்டும் அல்லது
மாற்று ஆளணியினை நியமிக்க வேண்டும்.

அத்துடன் கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வரும் சாவகச்சேரி
ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவரும் மாற்றீடு ஆளணியின்றி
இவ்வாறே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.