முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சபை தவிசாளருக்கு எதிராக முறைப்பாடு

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சபை தவிசாளர் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 10 பேர் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் காரியாலயத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

தனியார் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணை
மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சபையில்; இருந்து வெளியேறி வெளிநடப்பு செய்தது முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் கல்லடியில் உள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர்
காரியாலயத்தில் சம்பவதினமான வியாழக்கிழமை (20) மண்முனை தென் எருவில் பற்று
பிரதேச சபை உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.

பிரேரணைகள் 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று
சபை தவிசாளர் என்.வினோராஜ் தலைமையில் இடம்பெற்ற போது தவிசாளர் மற்றும்
உறுப்பினர்கள் கொண்டு வந்த பிரேரணைகள் ஒன்றின்பின் ஒன்றாக கொண்டு வரப்பட்டது.

 இதன்போது எமது பிரதேச சபைக்கு உட்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பாக
பிரேரணைகள் கொண்டுவரப்பட்டது இதன்போது நாங்கள் எங்கள் கருத்துக்களை
தெரிவித்தோம்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சபை தவிசாளருக்கு எதிராக முறைப்பாடு | Members Complaint Commissioner Local Government

இந்த தனியார் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்துவதால் எமது பிரதேச
மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகின்றது எனவே திடீரென இதனை
கட்டுப்படுத்துவது சிந்திக்க வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்து 10
உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக வாக்கெடுப்பை தவிசாளர்
கோரினார்.

இதன் பிரகாரம் வாக்கெடுப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள்
எதிர்ப்பான வாக்களிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவிசாளர் அதை கையடக்க
தொலைபேசியில் வீடியோ படம் பதிவு செய்து கொண்டு எங்களைபற்றி தவறான கருத்துக்களை
தெரிவித்தார்.

முறைப்பாடு

அப்போது நாங்கள் குறுக்கிட்டு எங்களைபற்றி தவறான கருத்துக்களை நீங்கள் வீடியோ
பதிவு செய்ய வேண்டாம் என இதை தவறான முறையில் ஊடகங்களுக்கு வழங்க
திட்டமிட்டுள்ளீர்கள் என சுட்டிக்காட்டி இருந்தோம்.

இப்போது உறுப்பினர் வதனகுமார்
கடுமையாக ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து அவரை தவிசாளர் வெளியேற்றுவதற்கு உரிய
பிரேரணையை கொண்டு வந்த போது அதற்கு 10 வாக்குகள் ஆதரவாகவும் 10 வாக்குகள்
எதிராகவும் இருந்த நிலையில் தவிசாளர் தனக்குரிய 2 வாக்கை பயன்படுத்தி இவரை ஒரு
மாதத்திற்கு சபை அமர்வுக்கு தடைசெய்து அதை நிறைவேற்றினார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சபை தவிசாளருக்கு எதிராக முறைப்பாடு | Members Complaint Commissioner Local Government

இவ்வாறு தவிசாளர் தொடர்ச்சியாக உறுப்பினர்களை சபையில் பேச விடாது கருத்து
தெரிவிக்கும் உறுப்பினர்களை அதிகார தொனியில் அச்சுறுத்தி வருகின்ற செயல்பாடு
இடம் பெற்று வருவதையடுத்து கிருஷ்ணகுமார் வதனகுமார், யோகராசா சந்திரகுமார்,
ஆனந்தகிருஷ்ணன் அரவிந்தன், சண்முகநாதன் கணேசநாதன், தம்பிப்பிள்ளை சலாக்கிராஜ்,
வீரகுல சிங்கம் இந்திராதேவி, த.சர்சீகா, கலைவாணன் நிரோஜினி, ரு. துவேனிகா,
கந்தசாமி ஜெய்சங்கர் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறி
வெளிநடப்பு செய்ததுடன் உள்ளூராட்சி காரியாலயத்துக்கு சென்று உதவி ஆணையாளர்
எம்.ஆர்.எப் றிப்கா விடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.