திருகோணமலையில் (Trincomalee) தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (16) திருகோணமலை
சிவன் கோவிலில் நினைவு ஊர்தியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சிவன் கோவிலடியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவுகூரலில்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன்
மற்றும் திருகோணமலை வாழ் மக்கள் ஒன்றிணைந்து சுடர் ஏற்றி உருவப்படத்திற்கு
மரியாதை செலுத்தியுள்ளனர்.
நினைவு ஊர்தி
இதையடுத்து, குறித்த நினைவு ஊர்தியானது திருகோணமலை நகரை வலம்வந்ததுடன் பொதுமக்கள்
தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

அஞலியின் பின்னராக ஊடகங்களுக்கு செல்வராசா கஜேந்திரன் தமது கருத்துக்களையும்
வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

