முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மண் வெட்டியால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் யாழ் போதனாவில் உயிரிழப்பு

மண் வெட்டியால் தாக்கப்பட்ட சம்பவத்தில், யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

செல்வபுரம் வடக்கு வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேற்பிள்ளை கண்ணதாசன் (வயது 56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அனிச்சம் குளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் காவலாளியாக உள்ள மேற்படி நபர்
கடந்த மாதம் 10 ஆம் திகதி மூன்று பேருக்கு உணவெடுத்துக் கொண்டு சென்று அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூவரும் உணவருந்தியுள்ளனர்.

திடீர் மரண விசாரணை 

இதன்போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் மூவரில் ஒருவர் மண் வெட்டியால் மேற்படி நபரை தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார்.

மண் வெட்டியால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் யாழ் போதனாவில் உயிரிழப்பு | Men Death In Jaffna Teaching Hospital

இதனை அடுத்து தாக்கிய நபர் நெட்டங்கண்டால் காவல்துறையில் சரணடைந்தார். மற்றையவர் ஓடி ஒழிந்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்தவர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் நேற்று (20) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

You may like this

https://www.youtube.com/embed/MZ7Gi1h_JH0

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்