டபிள்யூ. எம். நாகொட, வெலிசறையில் உள்ள மெண்டிஸ் & கம்பனியின் மதுபான உற்பத்தி ஆலைக்கு இன்று (5) சீல் வைக்கப்பட்டுள்ளது.
சட்ட விதிகளின்படி, மெண்டிஸ் நிறுவனம் மதுவரி மற்றும் அதனுடன் தொடர்புடைய 3% மேலதிகக் கட்டணமான 5.7 பில்லியன் ரூபாவையும் செலுத்த தவறியதன் காரணமாக நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை இன்று (5) முதல் இடைநிறுத்துமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவின்படி, மதுவரி திணைக்களம் மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த மதுவரி அத்தியட்சகர்கள் மற்றும் அதிகாரிகள் குழு குறித்த சீல் வைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
அரசாங்கத்தின் முடிவு
ஆறு மணி நேரத்துக்கும் மேலான கண்காணிப்புக்குப் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜாஎல மற்றும் கம்பஹா மதுவரி அத்தியட்சகர்கள, இன்று முதல் டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் கம்பெனியின் அனைத்து உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளும் சாத்தியமில்லை என தெரிவித்துள்ளனர்.
வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை கடந்த நவம்பர் 30ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம்
விஞ்ஞாபன முடிவொன்றை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.