முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17) அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலியான பத்திரங்களைப் பயன்படுத்தி தனியாருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக மெர்வின் சில்வா கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கை
குறித்த கைதானது, குற்றப் புலனாய்வுத் துறையினரால் மெர்வின் சில்வாவின் வீட்டில் கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மெர்வின் சில்வாவைத் தவிர, மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

