முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் மே 2ஆம்
திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழக புவியியல்
துறை தலைவரான நா. பிரதீபராஜா
தெரிவித்துள்ளார்.

நண்பகல் வரை கடுமையான வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலவும். பின்னர் பிற்பகல் 2.00 மணி அளவில் மழை கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மேற்காவுகை செயற்பாட்டால் உருவாகும் மழை என்பதால் இடி மின்னல் வகைகளில் இதுவே
அதிக சேதத்தை ஏற்படுத்த வல்லன. எனவே மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என நா. பிரதீபராஜா வேண்டுகொள் விடுத்துள்ளார்.

இடியுடன் கூடிய மழை

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை | Meteorology Weather Forecast For The Next 36 Hours

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (28.04.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்காலிக பலத்த காற்று

மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை | Meteorology Weather Forecast For The Next 36 Hours

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறுவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.