தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின்(MGR) 108ஆவது பிறந்ததினம் யாழில் கொண்டாடப்பட்டுள்ளது.
யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தின் ஏற்பாட்டில் யாழ் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி இராமசந்திரனின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
எம்.ஜி.இராமசந்திரனின் சிலைக்கு கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் அ.கேதீஸ் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்ததினம்
அதனை தொடர்ந்து எம்.ஜி.இராமசந்திரன் மற்றும் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்துக்கு நெய் விளக்குகள் ஏற்ப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினரால் மாணவர்களுக்குகான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான விளங்கிய யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் கல்வியங்காடு பகுதியில் தனது சொந்த நிதியில் அமைகப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்பாக் ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர் நினைவேந்தல்களை செய்து வந்த நிலையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தினார்.
இந்த நிலையில் அவரின் மறைவுக்கு பின்னர் அவரின் குடும்பத்தினர் குறித்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.