வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிறுவனங்கள் தமது வியாபார
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் பிரதேச சபையின் அனுமதி பெற்றே
நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று ஏகமனதாக தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (15) தவிசாளர் சிவலிங்கம்
அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள்
குறித்தும் வறிய மக்களை ஏப்பமிடும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவது
அவசியம் என்றும் வலியுறுத்தி உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தினால் முன்மொழிவொன்று
சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதிக வட்டி
குறித்த முன்மொழிவில் வறிய மக்களின் இலக்குவைத்து அதிக வட்டி வீதங்களுடன் பல
நுண் நிறுவனங்கள் கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்துள் உள் நுழைந்து ஏழை
மக்களை அதன் பொறிக்குள் வீழ்த்தி ஏமாற்றி ஏப்பமிட்டு வருகின்றது தெரிவிக்கப்பட்டது.
மேலும், “இந்த விளம்பரங்களால் எமது பிரதேச மக்கள் நிதிக்கான அவசர தேவை கருதி அதிகூடிய
வடிகளுக்கு நிதியை பெற்றுக்கொள்கின்றனர்.
அதன்பின்னர் குறித்த கடனை செலுத்துவதில் பெரும் இடர்களை சந்திகின்றனர்.
இதனால் மீளவும் நிதி கட்டத்தவறும் கடனாளிகள் வீடுகளுக்கு நேரகாலம்.
நிதி
வசூலிக்கும் நபர்கள் சென்று பெரும் தொல்லை கொடுக்கும் நிலை உருவாகின்றது.
அழுத்தங்கள்
அத்துடன் கடன் பெற்றவர்களுக்கு வசூலிப்போர் அழுத்தங்களை கொடுக்கின்ற
நிலையும் காணப்படுகின்றது” என கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, குறிப்பாக பெண் தலைமை குடும்பம் இக்கடனை பெற்றிருந்தால் குறித்த பெண்களுடன்
தவறான முறையில் நடந்துகொள்ள சில வசூலிப்பாளர்கள் முயற்சிப்பது மட்டுமல்லாது
அதற்கான மன அழுத்தங்களையும் கொடுக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த முன்மொழிவு குறித்து சபையின் தவிசாளர் அசோக்குமார் “சபையின் அனுமதி
பெறாது எந்தவொரு நுண் நிதி நிறுவனமும் உள்நுழைய முடியாது” என கூறியுள்ளார்.