மித்தெனியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், நேற்று (12) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து துபாய்க்கு பயணிக்க முயன்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
23 வயது சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் கட்டுவன, அகுலந்தெனியவில் வசிப்பவர், டோரெமுரேவைச் சேர்ந்த படலகே பசிது சஞ்சனா என்பவர் ஆவார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர், மித்தெனிய காவல்துறையின் சிறப்பு அதிகாரிகள் குழு விமான நிலையத்திற்கு வந்து சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக அழைத்துச் சென்றது.
தந்தை, பிள்ளைகள் உட்பட மூவர் சுட்டுக்கொலை
பெப்ரவரி 18 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் “கஜ்ஜா” என்ற அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய காவல்துறையினரும் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.