இறந்த மற்றும் அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் பெற்றோருக்கு வழங்கப்படும் பெற்றோர் பராமரிப்பு கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தவறான அறிக்கையொன்று பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு தெளிவுப்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில், இராணுவ வீரர்கள் சேவை அதிகார சபையின் பெற்றோர் பராமரிப்பு பிரிவின் தலையீட்டின் மூலம் கொடுப்பனவு தொடர்ந்து வழங்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொடுப்பனவு
கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது ஒரு தவறான அறிக்கை பரப்பப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, அந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் மற்றும் கொடுப்பனவை நிறுத்தி வைக்க அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

