முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பால் மா விலை அதிகரிப்பின் எதிரொலி : மற்றொரு விலையும் அதிகரிப்பு

புதிய இணைப்பு

பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பால் மா விலை அதிகரிப்பின் எதிரொலி : மற்றொரு விலையும் அதிகரிப்பு | Milk Powder Price Increased By 100 Rs

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாவாலும், ஒரு கிலோ பால்மா பொதியின் விலை 250 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் (Milk powder importers) தெரிவித்துள்ளது. 

அதன்படி 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 1200 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

250 ரூபாவால் அதிகரிப்பு 

அதேபோல், 01 கிலோ கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் மா விலை அதிகரிப்பின் எதிரொலி : மற்றொரு விலையும் அதிகரிப்பு | Milk Powder Price Increased By 100 Rs

கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச பால்மா சந்தையில் தொடர்ந்து விலை உயர்வு ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்க பிரதிநிதிகள் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த அதிகரிப்புகள் இருந்தபோதிலும், நாட்டில் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக உள்ளூர் விலைகள் இதுவரை நிலையாகவே இருந்ததாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்..

இந்தநிலையில் உலகளாவிய ரீதியில் பால்மா விலையில் எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு குறைப்பும் உடனடியாக உள்ளூர் நுகர்வோருக்கு வழங்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்