புத்தளம் (Puttalam) பகுதியில் சுமார் ஒரு கோடி 30 இலட்சம் ரூபாவிற்கு கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற
மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று இரவு (16) புத்தளம் காவல்துறை விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கஜமுத்துக்களை விற்பனை செய்ய உள்ளதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் காவல்துறை விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு
குறித்த சுற்றிவளைப்பு புத்தளம் கொழும்பு (Colombo) முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்ற நிலையில் இதன்போது ஒரு கோடி 30 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட மூன்று கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், புத்தளம் மற்றும் மாவனெல்ல பகுதிகளைச் சேர்ந்த மூவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மற்றும் கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களையும் மேலதிக நடவடிக்ககளுக்காக புத்தளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.