கடும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை, விமான நிலையங்கள் வழியாக அழைத்துச்
செல்லும்போது அல்லது அழைத்து வரும்போது, உச்ச பாதுகாப்பை உறுதி செய்யுமாறு
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தனியான வழி
கடும் குற்றச்சாட்டுக்களுடனானவர்களை விமான நிலையங்கள் ஊடாக அழைத்து வரும்
அல்லது அழைத்துச் செல்லும் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத, தனியான வழியை
பயன்படுத்த வேண்டும் என்று அவர் பதில் பொலிஸ் மா அதிபரை கேட்டுள்ளார்.
குறிப்பாக பாதாள உலக சந்தேகத்துக்குரியவர்களின் முகத்தை மூடி அவர்களை பொது
பயணிகள் வழிகள் வழியாக அழைத்து வருவது பொருத்தமற்ற செயலாகவே உள்ளது. இது
பயணிகளை பயமுறுத்தும் செயலாகவே உள்ளது.
அமைதியின்மையை உருவாக்குகிறது
இது ஏனைய பயணிகளிடையே குறிப்பாக சுற்றுலா பயணிகள் மத்தியில் அமைதியின்மையை
உருவாக்குகிறது மற்றும் விமான நிலையத்தின் பிம்பத்தை பாதிக்கிறது. அதேநேரம்
குறித்த நபர்களின் எதிரிகள், அவர்களை இலக்கு வைக்க முடியும் என்றும் அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.