போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, அதிகாரபூர்வ
விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு வந்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய சபையின் தலைமைத்துவத்தை, போலந்து தற்போது வகித்து வரும்
நிலையில், அதன் வெளியுறவு அமைச்சரின் விஜயம் முக்கியம் பெறுகிறது.
அவர் மே 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்று, இலங்கையின்
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
இருதரப்பு உறவுகள்
போலந்தின் வெளியுறவு அமைச்சர் சிகோர்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு
மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணையகத்தின்
துணைத் தலைவருமான காஜா கல்லாஸை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கு
வந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, போலந்து வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக
சந்திக்கவுள்ளார்.
அத்துடன், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன், இருதரப்பு உறவுகள் குறித்து
பேச்சு நடத்தவுள்ளார்.