2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி(miss world 2025) பட்டத்தை ஓபல் சுச்சாட்டா சுங்ஸ்ரீ என்ற தாய்லாந்து (thailand)போட்டியாளர் வென்றார்.
1951 ஆம் ஆண்டு கிரேட் பிரிட்டனில்(uk) தொடங்கிய 72வது உலக அழகி பட்டப் போட்டி மே 7 ஆம் திகதி இந்தியாவின்(india) தெலுங்கானாவில் தொடங்கியது.
இந்த ஆண்டு, உலக அழகி பட்டப் போட்டியில் 108 போட்டியாளர்கள் பங்கேற்றனர், மேலும் அவர்கள் 4 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டனர்.
நான்கு கண்டங்களாக பிரிப்பு
அமெரிக்கா மற்றும் கரீபியன், ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியா எனப் பிரிக்கப்பட்டன.

ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இலங்கையிலிருந்தும் இந்த போட்டியில் அனுதி குணசேகர என்பவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

