முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதி கோரி போராட்டம்

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர்
கவனயீர்ப்பு போராட்டமானது இன்று வரை தொடர்ந்து இடம் பெற்றுக்
கொண்டிருக்கின்றது.

இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7
ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று (26) முல்லைத்தீவு நகர
சுற்றுவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நீதி கோரி போராட்டம்

இதன்போது, வேண்டும், வேண்டும் சர்வதேச நீதி வேண்டும். எங்கே எங்கே உறவுகள் எங்கே?.
இராணுவத்திடம் கையளித்த எங்களது உறவுகள் எங்கே?. வேண்டாம் வேண்டாம் ஓ எம் பி
வேண்டாம். உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் கொலைகாரனால் நீதி வழங்க
முடியுமா? காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும்
அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள். கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது
கொலை செய்த கதையை மறைக்கவே . உங்கள் இராணுவத்தை நம்பி கையில் ஒப்படைத்த எங்கள்
பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள்
பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதி கோரி போராட்டம் | Missing People Relatives Protest In Mullaitivu

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஐ.நா சபையில்
எங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

மக்களுக்கு மிரட்டல்

இந்த நிலையில், நீதி கோரி
போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்

தமது பிள்ளைகளை உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இறந்து
கொண்டிருக்கின்றார்கள்.

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதி கோரி போராட்டம் | Missing People Relatives Protest In Mullaitivu

இலங்கையில் ஓ.எம்.பி அலுவலகத்தினால் நட்ட ஈடும்
கொடுத்து மரண சான்றிதழும் கொடுக்கும் ஏற்பாடுகள் மக்களை விரட்டி விரட்டி
செய்கின்றார்கள்.

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர்
ஊடகாவும் கிராம அமைப்புக்கள் ஊடாகவும் அழுத்தங்கள் கொடுத்தும் மக்களை
மிரட்டுகின்றார்கள்.

சர்வதேச நீதிமன்றம்

இந்த பதிவுகள் செய்யாவிடின் எந்த ஒரு அரச பதிவுகளும்
உதவிகளும் தரமுடியாது என்று பயங்கரமான மிரட்டல் முல்லைத்தீவு மாவட்டத்தில்
நடந்து கொண்டிருக்கின்றது.

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதி கோரி போராட்டம் | Missing People Relatives Protest In Mullaitivu

இந்த மிரட்டல்களை தாண்டி எமக்கான நீதி கிடைக்கவேண்டும் சர்வதேச நீதிமன்றில்
நிறுத்த வேண்டும் குற்றம் புரிந்தவர்களை சர்வதேச கூண்டில் ஏற்றி நீதி
கிடைக்க வேண்டும்.

எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தான் போராடி
வருகின்றோம். எமக்கான நீதியினை சர்வதேசம் மட்டும் தான் தரவேண்டும் என்றும்
போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.