எங்களது போராட்டம் பதவிக்காகவும் பணத்திற்காகவும் இல்லை என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின்
கலந்துரையாடலும் ஊடக சந்திப்பும் யாழ். கொடிகாமத்தில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் சங்கத்தில் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசா தலைமையில் முன்னெக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டிருந்தனர்.