எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த ஜனாதிபதி வந்தாலும் எங்களுக்கு ஒருபலனும் இல்லை என
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி
சிவானந்தன் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தொடர்ச்சியாக பெரும்பான்மை ஜனாதிபதிளே மாறி மாறி ஆட்சியில் வந்து
கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு வருபவர்களால் தமிழர்களுக்கு எந்த நிதந்தர
தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
தமிழ் மக்களுக்கு நீண்டகாலமாக ஒரு அடிப்படை உரிமைகள் வழங்கப்படாமல் வடக்கு – கிழக்கு இணைந்த தாயக மக்களாக வாழ்ந்து
வருகின்றோம். இவ்வாறான நிலையில் இந்த ஜனாதிபதி தேர்தலால் எந்த பயனும் இல்லை.
இலங்கையின் 9ஆவது ஜனாதிபதி தேர்தலில் வடக்கு – கிழக்கில் உள்ள வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது.
இலங்கையில் எந்த ஜனாதிபதி வந்தாலும் எங்களுக்கு ஒருபலனும் இல்லை அரசியல்
தீர்வும் இல்லாமல் தான் அந்த ஜனாதிபதி இந்த நாட்டில் தெரிவு
செய்யப்படபோகின்றார்.
எனவே யாப்பு விதிமுறைகளை மாற்றி அமைத்து ஒரு புதிய யாப்பு முறைகளுக்குள் இந்த
நாட்டில் தமிழ்மக்களுக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அதன் அடிப்படையில் தமிழ் மக்களும் ஆட்சிக்கு வரலாம் என்று சொன்னால் அந்த ஜனாதிபதி தேர்தலை
நாங்கள் ஆதரிக்கலாம்.
எனவே இந்த ஜனாதிபதி தேர்தலில் எந்த நன்மையும் இல்லை.
அதனால் இந்த ஜனாதிபதி தேர்தலை பற்றிய எந்தவித பொறுப்பும் இல்லை” என அவர்
தெரிவித்துள்ளார்.