அங்கீகரிக்கப்படாத தொலைப்பேசிகளின் பயன்பாட்டைக் கண்டறிந்து தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அறிவித்துள்ளது.
அதன்படி, ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்படாத தொலைத்தொடர்பு சாதனங்கள் (mobile devices)வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவினால் பதிவுசெய்யப்பட்ட IMEI-இயக்கப்பட்ட சாதனங்களை மட்டுமே வாங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்
இதேவேளை, பதிவுசெய்யப்படாத IMEI-இயக்கப்பட்ட சாதனங்கள் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒபரேட்டர் வலையமைப்பின் செயலில் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஜனவரி 28, 2025 க்கு முன்பு தொலைத்தொடர்பு ஒபரேட்டடரின் வலையமைப்புகளில் இணைக்கப்பட்ட IMEI-இயக்கப்பட்ட சாதனங்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.