முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று முதல் நடைமுறைக்கு வரும் தொலைபேசிகளுக்கான புதிய தடை

இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRCSL) சர்வதேச தொலைபேசி உபகரண அடையாள (IMEI) எண் பதிவுசெய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (Air Vice Marshal Bandula Herath) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கையடக்க தொலைபேசிகள், கம்பி தொடர்பற்ற வலையமைப்புகள், ட்ரோன்கள், ரேடார் உட்பட ரேடியோ அலைகளின் பிற உபகரணங்கள் மற்றும் பல்வேறு தொழில்துறை மற்றும் மருத்துவ பயன்பாடு உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

இலத்திரனியல் உபகரண கொள்வனவு

பதிவு செய்வதன் மூலம் முறையான அனுமதியைப் பெற முடியும். இதன் மூலம் சான்றளிக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்களை பயனாளர்களுக்கு வழங்குவது ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் தொலைபேசிகளுக்கான புதிய தடை | Mobile Phones Without Register Imei Number Banned

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் சட்டவிரோத இறக்குமதிகளை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், இலங்கையில் தொலைபேசி சாதன கண்காணிப்பை நெறிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

IMEI ஐ TRCSL உடன் பதிவு செய்வது இலங்கையின் தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதுடன் உள்ளூர் வலையமைப்புகளை அணுகுவதில் இருந்து அங்கீகரிக்கப்படாத அல்லது திருடப்பட்ட சாதனங்களை தடுக்க உதவுகிறது.

எண்ணைப் பெற்றுக்கொள்ளும் முறை

நாட்டின் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெருமளவான இலத்திரனியல் சாதனங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இத்தகைய சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதால் அரசாங்கத்திற்கு வரி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பதினைந்து இலக்க சர்வதேச கையடக்க உபகரண அடையாளம் என்பது ஒவ்வொரு தொலைபேசிக்கும் வழங்கப்படும் தனித்துவமான எண் ஆகும்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் தொலைபேசிகளுக்கான புதிய தடை | Mobile Phones Without Register Imei Number Banned

கையடக்க தொலைபேசியில் உள்ள விசைத்தளத்தில் (Keypad)  *#06# என உள்ளிடுவதன் மூலமும் இதை கையடக்க தொலைபேசியின் திரையில் காண்பிக்க முடியும்.

அத்துடன் கையடக்க தொலைபேசியின் IMEI எண்ணை பின்வரும் வடிவத்தில் 1909 க்கு SMS ( IMEI (இடைவெளி) 15 இலக்க IMEI எண்) அனுப்புவதன் மூலம் சரிபார்க்கலாம்” என தெரிவித்தார்.

YOU MAY LIKE THIS

https://www.youtube.com/embed/Obnb8v5Lt0I

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.