இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என தான் நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தலை நடாத்தி இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புவதாகவும் மோடி கூறியுள்ளார்.
அழுத்தத்தை கொடுக்காது
இதேவேளை, இதற்கு முன்னர் ஆட்சியமைத்த அரசாங்கங்களிடமும் இந்திய அரசு இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் வலியுறுத்தல் அநுர அரசுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்காது என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.