அறநெறிப் பள்ளி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது பௌத்த விவகாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்வுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி மார்ச் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவம்
தொடர்புடைய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல்களை https://forms.office.com/r/DMfuCsHLWx என்ற இணையதளத்தில் இருந்து அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், 2020/2022 கல்வியாண்டில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பாடநெறிகளை முடித்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான தகவல் சேகரிப்பு நிகழ்நிலையில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.