முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகாரிகளை அவமதித்த அர்ச்சுனா! அதிகாரமுடையவர்கள் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு

யாழில் (Jaffna) இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் அதிகாரிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவமதித்த போது கட்டுப்படுத்த வேண்டியவர்கள் சபையில் வேடிக்கை பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (13) அமைச்சர் சந்திரசேகரன்
தலைமையில் இடம்பெற்ற முதலாவது அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே
இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் இம்முறை நாடாளுமன்றம் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா அதிகாரிகளை விழித்த வார்த்தைகள் சபை
ஒழுங்குக்கும் கூட்டம் ஒழுங்குக்கும் முரணாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதிகாரிகளை சாடிய அர்ச்சுனா

அதாவது, நகர அபிவிருத்தி தொடர்பான விவாதத்தின் எப்போது நாடாளுமன்ற உறுப்பினர்
அர்ச்சுனா வருகை தந்த துறை சார்ந்த பெண் உயர் அதிகாரி ஒருவரை “அன்டி” உங்கள்
முகம் வியர்க்கிறது உங்களுக்கு திட்டமிடல் என்றால் என்ன என தெரியுமா? என
கேட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை “தங்கம்” “முத்து
“என அடிக்கடி கூறியதுடன் அவரின் கல்வித் தகமை தொடர்பிலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரிகளை அவமதித்த அர்ச்சுனா! அதிகாரமுடையவர்கள் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு | Mp Archuna Insulted Development Officials Today

மாகாண அதிகாரி ஒருவரை படையப்பா படம் பார்த்தீர்களா பத்து மில்லியனை 10 நாளில்
எப்படி செலவளிப்பீர்கள் தனக்கு கூறுமாறு அடிக்கடி குறுக்குடு செய்து கேள்விகளை
தொடுத்துள்ளார்.

அத்துடன், யாழ் மாவட்டத்தில் திட்டங்களை வகுக்கும்போது உங்கள் கல்வி
அறிவு போதாது என அதிகாரிகளை விமர்சித்ததுடன் அவ்வாறு தேவைப்பட்டால் என்னிடம்
வாருங்கள் கற்றுத் தருகிறேன் என சாடியுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் சந்திரசேகரன், வடமாகான ஆளுநர்
வேதநாயகன் மற்றும் மாவட்ட பதில அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் ஆகியோர்
நாடாளுமன்ற உறுப்பினரை கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.