நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் எவராவது கொலை செய்யப்பட்டால், அதற்கு சபாநாயகரே
பொறுப்பேற்கவேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி
ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
பாதீடு தொடர்பான விவாதத்தின் போது இன்று (20) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகரே பொறுப்பு
இந்தநிலையில், நாடாளுமன்ற
உறுப்பினர்களின் பாதுகாவலர் நாடாளுமன்ற சபாநாயகர் என்றும், ஒரு
உறுப்பினருக்காவது ஏதாவது நடந்தால் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.
தமக்கு பாதுகாப்பு தேவையில்லை. எனினும் எந்த துப்பாக்கிச் சூட்டையும்
எதிர்கொள்ள தாம் தயாராக இல்லை என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.