நாடாளுமன்றத்தில், இன்றைய சபை அமர்வுகளின்போது, பிரதி அமைச்சர் அருண்
ஹேமச்சந்திராவுக்கு ‘ஒழுங்குப் பிரச்சனை எழுப்புவதற்கு சபாநாயகர் சந்தர்ப்பம்
அளித்ததை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்த்தமை பெரும்
சலசலப்பை ஏற்படுத்தியது.
ஒழுங்குப் பிரச்சினை எழுப்புவது தொடர்பான நிலையியற் கட்டளை விதிகளை
சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர்
ஒருவர் தனது பெயரைக் குறிப்பிட்டுப் பேசினால் மட்டுமே ஒரு நாடாளுமன்ற
உறுப்பினரால் ஒழுங்குப் பிரச்சினை எழுப்ப முடியும்.
அர்ச்சுனாவினால் சலசலப்பு
ஆனால், இப்போது, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் பெயர்
குறிப்பிடப்படாதபோதும், அவருக்கு நீங்கள் ஒழுங்குப் பிரச்சினை எழுப்ப
வாய்ப்பளித்தீர்கள்.

“ஒரு அமைச்சரவை அமைச்சரால் மட்டுமே, அவரது பெயர்
குறிப்பிடப்படாதபோதும், ஒழுங்குப் பிரச்சினை எழுப்ப முடியுமா?
மற்றவர்களுக்கு இந்த விதி பொருந்தாதா? என்றும் அவர் வாதிட்டார்.
சபாநாயகரின் இந்த முடிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கடும் ஆட்சேபனை
தெரிவித்ததால், நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

