முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அர்ச்சுனாவை பழிவாங்குகிறாரா சஜித்..! தொடர்ந்து மறுக்கப்படும் சிறப்புரிமை

தமக்கு நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (08) இரண்டாவது முறையாகவும் சபையில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினமும் இந்த விடயம் தொடர்பில் அவர் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்த நிலையில் சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே குறித்த கோரிக்கையை இன்றைய தினமும் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரிடமும் விடுத்துள்ளார்.

விரைவாக பதில் வழங்க கோரிக்கை

இதன்போது, தமக்கு நேரம் வழங்குவது தொடர்பில் குழு ஒன்றை நியமித்து கலந்துரையாடப்படும் என சபாநாயகர் நேற்றைய தினம் உறுதியளித்ததை அடுத்து, அர்ச்சுனா இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நினைவுபடுத்தியுள்ளார்.

இந்தநிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வின் போதும் தாம் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்து இருக்கையில் அமர்ந்து மேலே பார்த்துக் கொண்டு மீண்டும் சென்று விடுவதாக தெரிவித்திருந்தார்.

எனவே தாம் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பில் தமக்கு விரைவாக பதில் வழங்குமாறும் கேட்டுக்கொண்டதோடு,  இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி,

குறித்த பிரச்சினை தொடர்பில் நிச்சயமாக சபாநாயகர் தமது கருத்தைத் தெரிவிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்