புதிய இணைப்பு
(4.00PM)
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு தம்பலகாமம் ஆதிகோனேஸ்வரா வித்தியாலயத்தில்
தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா பார்வையிட்டார்.
குறித்த இடைத் தங்கல் முகாமில் 42 குடும்பங்களை சேர்ந்த 107 பேர் உள்ளனர்.
இன்று மாலை குறித்த பகுதிகளில் நீர் மட்டம் குறைவடைந்தால் சொந்த
இடத்துக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தம்பலகாமம் பிரதேச
செயலாளர் ஜெ.ஸ்ரீபதி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் சேருவில– சோமபுர –மாவிலாறு பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு காரணமாக ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டதாக கிழக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
சேருவில, சோமபுர மற்றும் மாவில் ஆறு பகுதிகளில் வெள்ளப் பாதிப்பால்
சிக்கியிருந்தவர்கள் தற்போது விமானப்படையின் உதவியுடன் ஹெலிகொப்டர் மூலம்
பாதுகாப்பான இடங்களுக்கு இன்று (30) மாற்றப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் திருகோணமலை சீனக்குடா விமானப்படை முகாம் மற்றும் சேருவில
மகாவலி விளையாட்டு மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, மேலும் 22 பேரை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது வான்வழி மூலம் நடைபெற்று
வருகின்றன.
இன்னும் பலர் சிக்கியிருக்கும் சாத்தியம் காணப்படுவதால், அடுத்த கட்ட மீட்பு
பணிகள் வான்வழியும் கடற்படையின் உதவியுடனும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ரொசான் அக்மீமனவும் கருத்துரைத்துள்ளார்.
செய்தி – ரொஷான்
முதலாம் இணைப்பு
மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள வாகரை பகுதிக்கு சிறிநாத் எம்.பி விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் ஏற்படுள்ள வெள்ள நிலைமையினால் திருகோணமலை – மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
இடைத்தங்கல் முகாம்கள்
இதனையடுத்து, குறித்த பகுதியில் உள்ள மக்கள் கதிரவெளி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்விடர் நிலைமையினை அறிந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் குறித்த இடத்திற்கு இன்றைய தினம் 30.11.2025 விரைந்து சென்று மக்களோடு மக்களாக களத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.








