நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்காக இன்று (05) முதல் 2,000 ரூபா பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்திற்கான நாடாளுமன்றம் அமர்வு இன்று கூடியதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்கான குறித்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவிற்காக நாளாந்தம் வசூலிக்கப்படும் பணம் 2,000 ரூபாவாக உயர்த்துவதற்கு நாடாளுமன்ற சபை குழுவில் கடந்த 23 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.
விலை உயர்வு
அதன்படி, நாடாளுமன்ற உணவகத்தில் காலை உணவின் விலை 600 ரூபா ஆகவும், மதிய உணவு 1,200 ரூபா ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கோப்பை தேநீரின் விலை 200 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு இந்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.