முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு – அளம்பிலில் தொடரும் துயரம்

Courtesy: uky(ஊகி)

 முல்லைத்தீவு அளம்பிலில் வீதியின் குறுக்கே வீரை மரமொன்று பாறி விழுந்துள்ளது.
இது போக்குவரத்துக்குத் தடையாக அமைந்துள்ளதால் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணியாளர்கள் மரத்தினை வெட்டி அகற்றுவதில் ஈடுபடுவதோடு போக்குவரத்தினையும் ஒழுங்குபடுத்தியவாறு இருப்பதையும் அவதானிக்கலாம்.

பயணியின் கருத்து 

அவர்களது இந்த செயற்பாடு தொடர்பில் பயணியொருவர் பின்வருமாறு தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு - அளம்பிலில் தொடரும் துயரம் | Mullaitivu Continues Incidents

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் உள்ள பிரதான நகரமாக அளம்பில் உள்ளது.இந்த வீதியில் ஏற்பட்டுவரும் தடைகளை உடனுக்குடன் அகற்றுவதிலும் வீதியை பராமரிப்பிலும் இவர்களது தொடர்ச்சியான செயற்பாடுகளை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன்.

பொறுப்புணர்ச்சியுடன் ஆற்றிவரும் இவர்களது பணி பாராட்டத்தக்கது என அவர் குறிப்பிட்டுகின்றார்.

தொடரும் துயரம் 

அளம்பில் பகுதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக மரங்கள் வீதியின் குறுக்கே பாறி விழுந்து போக்குவரத்து தடையை ஏற்படுத்தி வருகின்றன.

முல்லைத்தீவு - அளம்பிலில் தொடரும் துயரம் | Mullaitivu Continues Incidents

அவற்றை அகற்றி போக்குவரத்தை சீர் செய்வதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அளம்பில் பகுதியில் உள்ள வீதிகளில் மரங்கள் அதிகமாக இருப்பதும் அவை இயற்கையாக வளர்ந்துள்ளவையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு - அளம்பிலில் தொடரும் துயரம் | Mullaitivu Continues Incidents

காடுகளில் உள்ள மரங்கள் நெருக்கமாக இருப்பதோடு தொடர்ச்சியாக மேல்மண் படையதிகரிப்பை உக்கும் தாவர விலங்கு பொருட்களால் சாத்தியப்பாடாக்கி வருவதையும் சுட்டிக்காட்டும் காடுகள் பற்றிய ஆர்வலர், வீதியோரங்களில் தனித்து விடப்பட்ட மரங்கள் அவ்வாறான வாழிடத்தை பெறவில்லை எனக் குறிப்பிடுகிறார்.

தனித்து விடப்பட்ட மரங்கள் அவற்றின் அடியில் மண்ணரிப்பு மற்றும் உக்கலடைந்து தேங்கும் தாவர விலங்கு பொருட்களற்ற நிலையில் மேல்மண் படையகற்றலுக்குள்ளாவதை அவதானிக்கலாம்.

இவை மரங்கள் அவற்றின் வயது மூப்போடு பாறிவிழும் வாய்ப்புக்களையும் எதிர்கொள்ளவதாக அவர் மேலும் குறிப்பிட்டுகின்றார்.

ஆய்வுகள் தேவை 

வீதியோரம் இயற்கையாக வளர்ந்துள்ள மரங்களால் ஏற்படும் இடையூறுகளுக்கு தீர்வாக அவற்றை அகற்றுவது மட்டுமே பொருத்தமானதாக கொள்ளாது அவற்றை தொடர்ந்து பாதுகாத்தபடி அவற்றால் ஏற்படும் இடையூறுகளை தவிர்த்து வாழ தீர்வு காணப்பட வேண்டும்.

இதற்கு தாவரவியல் சார் துறை நிபுணர் உதவிகளோடு முறையான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இது சாத்தியப்பாடாகும் போது மரங்களையும் பாதுகாப்பதோடு அவற்றால் ஏற்படும் இடையூறுகளும் குறைக்கப்பட நல்ல வாய்ப்பேற்படும் என்பதும் நோக்கத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.