முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பனவு பெற சென்ற வயோதிப பெண் ஒருவர், தான் மோசமாக நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு இன்று (14) காலை முதியோர் கொடுப்பனவு எடுக்க சென்ற வயோதிப பெண் தான் மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வயோதிபர் கொடுப்பனவு..
தன்னை மரியாதைக் குறைவாக நடத்தி முதியோர் கொடுப்பனவு அட்டையை தூக்கி எறிந்ததாக அந்த வயோதிப பெண் தெரிவித்துள்ளார்.
ரூபா 250 இற்காக காலையிலேயே நீர் கூட பருகாமல் நடந்து வந்து காத்திருந்த தனக்கு நடந்த இந்த சம்பவத்திற்கு யார் நியாயம் வாங்கி தருவது என அவர் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.

