முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு மாவட்ட முதலாவது கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான முதலாவது கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக்
கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன
கமகே தலைமையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன் மற்றும் ரவிகரன்
ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது

குறித்த கூட்டமானது நேற்றுமுன்தினம்(25) பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட செயலக
பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.
உமாமகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம்

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றுக்கு
விரைவான தீர்வுகளை வழங்குவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

முல்லைத்தீவு
மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை
பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோவில் மீன்களை
பிடிக்கின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட முதலாவது கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் | Mullaitivu First Fisheries Dc Meeting

இதனால் சாதாரண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக
கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின்
மாவட்ட பணிப்பாளர் ஆகியோர் பிரதி அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதற்கு விசேட
செயலணியை உருவாக்கி நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், அமைச்சின் மேலதிக செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
(காணி), கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கடலோரப்
பாதுகாப்பு திணைக்களம், பொலிஸார், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப்
பலரும் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.