முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போராட்டம் தொடரும்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திட்டவட்டம்

உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை நாங்கள்
தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட சங்கத்தின் நிர்வாக தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையிலே அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய
நிர்வாகத்தெரிவு நேற்றையதினம்(26) இடம்பெற்றிருந்தது.

போராட்டம் தொடரும்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திட்டவட்டம் | Mullaitivu Protest Group Elects New Leaders

மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி
ம.ஈஸ்வரி பதவியில் இருந்து விலகியதன் காரணமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய
நிர்வாகத்தெரிவு முல்லைத்தீவு போராட்ட இடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றிருந்தது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி
யோ.கனகனகரஞ்சினி , மன்னார் மாவட்ட தலைவி ம.உதயசந்திரா மற்றும் முல்லைத்தீவு
மாவட்ட சங்க உறுப்பினர்கள் மத்தியில் ஆரம்பமாகிய தெரிவு கூட்டத்தில்
முல்லைத்தீவு மாவட்ட தலைவியாக நி.வசந்தினி, செயலாளராக பொ.கரன், பொருளாளராக
நாகேஸ்வரி, உப தலைவராக ப.வீரமணி, உப செயலாளராக றஞ்சினிதேவியும் தற்காலிகமாக
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாபெரும் போராட்டம்

குறித்த தெரிவு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திரதினம் அன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்
ஒன்று இடம்பெற இருக்கின்றது. குறித்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர
வேண்டும்.

அத்தோடு உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக
உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என
இதன் போது தெரிவித்திருந்தார்கள்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.